நக்கீரன் நூல்கள்

நக்கீரன் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 001)

மு.சிவகுருநாதன்

           திருவாரூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 02 முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 46 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மதுரை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் மட்டும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

     தற்போது மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI- பபாசி) ஆகியன மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகின்றன. வாசிப்பை இயக்கமாக்க மாநில அரசின் ஒத்துழைப்போடு இவை நடந்து வருவது மகிழ்ச்சிக்குரியது.

       நூல்கள் எனும் போர்வையில் குப்பைகள் மலிந்துள்ளன. அவற்றில் நல்ல நூல்களைத் தேடிக் கண்டடைவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.       மாணவர்கள், ஆசிரியர்கள், புத்தக வாசிப்பாளர்கள், ஆர்வலர்கள் என பலரும் வாங்கி வாசிக்கத் தக்க நூல்களின் பட்டியல் மட்டும் இங்கு தரப்படுகிறது.

        பள்ளிக்குழந்தைகளுக்கு  வெறும் நீதிக்கதைகளை மட்டும் வாங்கித் தராமல் இயற்கை, சூழலியல், அறிவியல், வரலாறு, சமூகம், குழந்தை இலக்கியம் சார்ந்த சிந்திக்கத் தூண்டும் நூல்களை வாங்கி அளிப்பதும் அவற்றை படிக்க வைப்பதும் ஓர் இன்றியமையாதச் செயல்பாடாகும். இவ்வகை நூல்கள் குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரையும்  எளிதில் கவரும் என்பது உறுதி.

         இங்கு பட்டியலிடும் நூல்களின் பதிப்பகங்கள் சிறியதாக இருக்கும் நிலையில் அவர்களது கடைகளில் கண்காட்சியில் இருக்கும் என்றும் சொல்ல இயலாது. சில நூல்கள் வேறு கடைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் விவரங்களை கண்காட்சி தொடங்கிய பின்னரே குறிப்பிட இயலும் என்பதை உணரவும். நேரடியாக அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டும் நூல்களைப் பெறலாம்.

         திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில்  வசிக்கும் நக்கீரன் சூழலியலை அரசியல் புரிதலுடன் வெளிப்படுத்தும் எழுத்தாளர் என்பதை அவரது ஆக்கங்களைப் படிக்கும் அனைவரும் அறிவர். சூழலியல் எழுத்தாளர் மட்டுமின்றி, கவிதை, நாவல், குறுநாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம் என பலதுறைகளிலும் ஆளுமை பதித்தவர். அவரது ‘காடோடி’ பதிப்பக நூல்களின் பட்டியல்  கீழே தரப்படுகிறது.

  1. காடோடி – நாவல்  ₹360
  2. நீர் எழுத்து  ₹300
  3. தமிழ் ஒரு சூழலியல் மொழி  ₹190
  4. பசுமைப்பள்ளி  ₹100
  5. சூழலும் சாதியும்  ₹90
  6. பால் அரசியல்  ₹70
  7. கார்ப்பரேட் கோடரி   ₹70
  8. உயிரைக் குடிக்கும் புட்டிநீர்   ₹50
  9. கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்  ₹30
  10. மழைக்காடுகளின் மரணம்    ₹30
  11. அலையத்திக் காடு  ₹30
  12. எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்  ₹30
  13. வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி – குறுநாவல்    ₹80
  14. என் பெயர் ஜிப்சி – கவிதைகள்  ₹60

 வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6,  வி.கே.என். நகர்,

நன்னிலம் – 610105,

திருவாரூர் – மாவட்டம்.

வாட்ஸ் அப்: 8072730977

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

கல்விப்புலம் காணாத பாடங்கள்!

நீர் – அதிகாரம் – நுண்ணரசியல்

https://musivagurunathan.blogspot.com/2020/05/blog-post_11.html

சொற்களை ஆயுதமாக உருமாற்றும்  ரசவாதியான கவிஞன்

https://musivagurunathan.blogspot.com/2015/12/24.html

‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை

https://musivagurunathan.blogspot.com/2016/11/58.html

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை…

https://musivagurunathan.blogspot.com/2015/03/blog-post_28.html

(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின் பட்டியல் – தொடரும்…)