சமீபத்தில் வெளியான கல்வி, அறிவியல் துறை தொடர்பான நூல்களில் சில:
கல்வி அபத்தங்கள்
தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல் கழகத்தால் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டுள்ளதுடன் அந்தப் பிழைகளுக்கான திருத்தங்களையும் பரிந்துரைக்கிறது இந்நூல். குறைகளை மட்டும் சொல்லாமல், முந்தைய பாடநூல் வடிவமைப்புக் குழுக்களுடன் ஒப்பிட்டால் புதிய குழு செயல்படுத்தியிருக்கும் வரவேற்புக்குரிய மாற்றங்களையும் பாடநூல்களில் பாராட்டுக்குரிய அம்சங்களையும் இந்த நூல் அடையாளம் காட்டியுள்ளது.
தொடர்புக்கு: பன்மை – 9842402010
நன்றி: இந்து தமிழ் திசை (மார்ச் 02, 2021)
வணக்கம்,
‘கல்வி அபத்தங்கள்’ எனும் இந்நூலில் புதிய பாடநூல்களில் (2018-2020) உள்ள பிழைகள், அபத்தங்கள், மொழியாக்கக் குளறுபடிகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் விரிவாக விளக்கி எழுதப்பட்டுள்ளன.
பாடநூல்களின் சிறப்பு அம்சங்களை ‘இந்து தமிழ் திசை’ போன்ற நாளிதழ்கள் வெகுவாகக் கொண்டாடித் தீர்த்துவிட்டன. எனவே அது நமது பணியாக இல்லை.
ஆங்காங்கே கடந்த பாடநூலுடன் வேறுபடும் சில அம்சங்களைச் சுட்டினாலும் பாடநூலின் அபத்தங்களைத் தோலுரிப்பதே நமது வேலையாக இருந்தது. இந்நூலைப் படிப்பவர்கள் அதனை எளிதில் உணர இயலும்.
நன்றி.
தோழமையுடன்…
மு.சிவகுருநாதன்