‘பேசும் புதிய சக்தி’ இதழில் ‘கல்வி அபத்தங்கள்’ நூல் அறிமுகம்
கல்வி அபத்தங்கள் / (பாடநூலாய்வுக் கட்டுரைகள்) / மு.சிவகுருநாதன் / வெளியீடு: பன்மை, நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், தியானபுரம் – விளமல், மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004 /
தொடர்புக்கு: 9842402010 / விலை ரூ. 580/-
“பாடநூல் என்பது வாசிப்பவர்கள் அனுபவிப்பதற்கான, ரசிப்பதற்கான அல்லது கண்ணீர் விடுவதற்கான ஒரு படைப்பு அல்ல; மாறாக அது பிள்ளைகள் பற்றிக் கொண்டு மேலெழுவதற்கான ஒரு ஏணி; ஒரு கருவி. மாணவர்கள் மட்டுமின்றி பாட நூல்களில் எல்லோருக்குமே அறிந்து கொள்ளச் செய்திகள் இருந்தாலும், அது மாணவர்களுக்கு, பிஞ்சு நெஞ்சங்களுக்கு எழுதப்படுபவை என்கிற எண்ணமும் பொறுப்பும் எழுதுபவருக்குத் தேவை. எந்த வகுப்புக்கு, என்ன மாதிரி வயதுள்ள மாணவருக்கு அது எழுதப்படுகிறது என்பது குறித்த கூடுதல் பிரக்ஞை இங்கு அவசியம் எனச் சொல்வது இந்தப் பின்னணியில்தான்” – என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்து நியாயமானது.
2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர்க்கல்வி முறையில் அறிமுகமான பாடநூல்களைக் குறித்து இந்நூல் கருத்துத் தெரிவிக்கவில்லை. பதிலாக நீட் தேர்வையொட்டிக் கொண்டுவரப்பட்ட அதாவது 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பாடநூல்களைக் குறித்த விமர்சனமாக இந்நூலைக் கருத்தில் கொள்ளலாம்.
104 தலைப்புகளில் 600 பக்கங்களில் இன்றைய நவீனக் கல்விச்சூழல் குறித்தும் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்டு வரும் பாடநூல்களைக் குறித்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
நன்றி: பேசும் புதிய சக்தி – ஏப்ரல் 2021