வெளிவந்துவிட்டது!
பன்மை வெளியீடுகள்…
வெளியீடு: 03
கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும் (கட்டுரைகள்) – இரா.மோகன்ராஜன்
முதல் பதிப்பு: ஏப்ரல் 2021
பக்கங்கள்: 176 விலை: ₹ 170

கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான அன்பும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது.
– செ. சண்முகசுந்தரம்
வெளியீடு: 04
எழுதுகோலைக் கொல்லும் அரசியல் (கட்டுரைகள்)
ஆசிரியர் : இரா.மோகன்ராஜன்
முதல் பதிப்பு: ஏப்ரல் 2021
பக்கங்கள்: 176 விலை: ₹ 170

இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது, மோகன்ராஜன் ஓர் சமரசமற்ற எழுத்துப்போராளி என்பது நமக்குப் புரிகிறது. “அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்”, என்று எட்வர்ட் சையித் சொல்வதுபோல, விளிம்புநிலை மக்கள், உழவர்கள், தொழிலாளிகள், சிறுகுறு தொழில் முனைவோர், மாணவர்கள், மகளிர், சமூகச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் வன்முறையையும், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் நாசகாரச் சக்திகளுக்கு எதிராகவும், தனது எழுதுகோலைத் துணிச்சலுடனும், நேர்மையுடனும், சமரசமின்றியும் பயன்படுத்தியிருப்பது, பாராட்டுக்குரியது.
– பேரா. சு. இராமசுப்பிரமணியன்
இவ்விரு நூல்களும் நேரில் ₹ 250
அஞ்சல் மற்றும் கூரியரில் ₹ 300
பன்மை,
நிலா வீடு,
2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர்,
தியானபுரம் – விளமல்,
மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,
திருவாரூர் – 610004.
அலைபேசி: 9842402010 (G Pay) 9842802010 (Whatsapp)
மின்னஞ்சல்: panmai2010@gmail.com | panmai@live.com
இணையம்: www.panmai.in