மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்

மு.சிவகுருநாதன்

             இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் நடத்திய புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் முதன்முதலில் சந்தித்தோம். அன்றைய தினம் மறைந்த த.பிரிட்டோ, கொளப்பாடு ச.பாண்டியன் போன்றோருடன் நண்பராகும் வாய்ப்பும் அமைந்தது. பிறகு ராயநல்லூர் பூங்குன்றப் பாண்டியன், இரவிக்குமார், செல்லப்பா போன்றோருடன் நட்புடன் வாசிப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இலக்கிய, நுண்ணரசியல் களங்களில் செயல்பாடுகளை முன்னெடுத்து வருபவர் அப்துல்காதர்.

         தற்போது ‘நன்னூல் பதிப்பகம்’ தொடங்கி தீவிர  அரசியல், சமூகம் சார்ந்த படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதுவரையில் 6 நூல்களை வெளியிட்டுள்ளார். பெண் எழுத்து, மொழிபெயர்ப்புகள் என விரைவில் பல நூல்கள் வர இருக்கின்றன. இதுவரை வந்த நூல்களை முழுமையாகப் படித்து எழுத வேண்டும். இங்கு பட்டியல் மட்டும்.

         காலதாமதமாகச் சென்றதால் ‘பேசும் புதிய சக்தி’ ஆசிரியர் தோழர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. பொறுப்பாசிரியர் எழுத்தாளர், நாவலாசிரியர் தோழர் எஸ்.செந்தில்குமார் அவர்களிடம் கையிலிருந்த 5 நூல்களை மதிப்புரைக்காக வழங்கிவிட்டுத் திரும்பினோம்.

நூற்களின் பட்டியல்:

  • நூறு புராணங்களின் வாசல் (குறுங்கதைகள்) – முபின் சாதிகா

            பக். 128 விலை: ₹ 130

  • ஆயிரம் காந்திகள் (கட்டுரைகள்) – சுனில் கிருஷ்ணன்

பக்.148 விலை: ₹ 120

  • சொற்களால் நெய்யப்படும் உலகு (கட்டுரைகள்) – ஜமாலன்

பக். 228 விலை: ₹ 250

  • இடைவெளிகளின் எதிரொலி (கவிதைகள்) – எஸ்.சண்முகம்

பக். 208 விலை: ₹ 220

  •  மறுப்பில் உயிர்க்கும் சொற்கள் (கட்டுரைகள்) – சுகுணா திவாகர்

பக்.120  விலை:  ₹ 130

  •  இத்தா (நாவல்) – கீரனூர் ஜாகீர் ராஜா

பக். 260 விலை: ₹ 280

  • விநியோக உரிமை:

‘இலக்கிய வெளி’ (கனடாவிலிருந்து வெளிவரும் இதழ்)

  இதழ்: 02 பக். 190 விலை: ₹ 200

வெளிவரவிருக்கும் சில நூல்கள்:

  • மஹாவித்துவன் (சிறுகதைகள்)

தெலுங்கு மூலம்: பேரா.தும்மல ராமகிருஷ்ணா

தமிழில்: முனைவர் க.மாரியப்பன்

  • சு.செல்லப்பாவின் இலக்கியத்தடம் (தொகுப்பு நூல்)

தொகுப்பு: முனைவர் க.மாரியப்பன்

  • சித்திரத்தில் பெண்ணெழுதி… (சிறுகதைகள்)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

  • அரபு இலக்கியம் – தொகுதி 01 (தொகுப்பு) – எச்.முஜுப் ரஹ்மான்
  •  அரபு இலக்கியம் – தொகுதி 02 (தொகுப்பு) – எச்.முஜுப் ரஹ்மான்
  •  துருக்கிய இலக்கியம் (தொகுப்பு) – எச்.முஜுப் ரஹ்மான்
  •  ஈரானிய இலக்கியம்  (தொகுப்பு) – எச்.முஜுப் ரஹ்மான்

     இவையனைத்தும் கிடைக்குமிடம்:

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9943624956

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *