‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்

‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்

(‘பன்மை’யின் ஆறாவது வெளியீடு)

                ‘பன்மை’யின் ஆறாவது வெளியீடாக குருங்குளம் முத்து ராஜாவின்  ‘பாட்டும் பாடமும்’ என்கிற சிறுவர் பாடல்கள் உலக புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23) வெளியாக இருக்கிறது.

நூலின் அணிந்துரையிலிருந்து…

          ‘பாட்டும் பாடமும்’ புத்தகத்திலுள்ள 75 பாடல்களையும் ஒன்று விடாமல் வாசித்தேன். சில பாடல்கள் என்னை அதற்குள் வசிக்க வைத்துவிட்டன. அறிவியல் கருத்துள்ள பாடல்கள், தமிழ் மொழி/தமிழன் பெருமை உணர்த்தும் பாடல்கள், சூழலியல் பாடல்கள், திருக்குறளைப் போற்றும் பாடல்கள், மரங்களின் அவசியம் குறித்த பாடல்கள், வரலாற்று முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் பாடல்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் பாடல்கள், குழந்தை/பறவை/விலங்கு குறித்த பாடல்கள்… இன்னும் ஏராளமான பாடல்களை வாசித்து, வாசித்த பரவசம் பெற்றேன்.

  • ஜெ.கிருஷ்ணமூர்த்தி,

செயலர்,

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்,

தமிழ்நாடு-புதுச்சேரி.

நூலின்  மதிப்புரையிலிருந்து…

       ஆசிரியர் குருங்குளம் முத்து ராஜா சமூக அக்கறையும் கருத்தியல் தெளிவும் அரசியல் புரிதலும் கொண்டவர். அதன் பிரதிபளிப்பை அவரது பாடல்களில் காண முடிகிறது. சூழலியல், அறிவியல், இயற்கை, மொழி, வரலாறு, பண்பாடு, விளையாட்டு, திருக்குறள், உறவுகள் போன்ற பல்வேறு களங்களை இத்தொகுப்பு பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இவற்றில் சூழலியல் குறித்த அக்கறைகள் மிகுதியாக வெளிப்படுவதையும் காண்கிறோம். 

  • மு.சிவகுருநாதன்

நூல் விவரங்கள்:

பாட்டும் பாடமும்  (சிறுவர் பாடல்கள்)

 குருங்குளம் முத்து ராஜா

முதல் பதிப்பு: ஏப்ரல் 2022

பக்கங்கள்:  108

விலை: ₹ 100

ISBN:   978-81-951842-8-6

வெளியீடு:

பன்மை,  நிலா வீடு,  2/396, பி, புரட்டாசி வீதி,

கூட்டுறவு நகர்,  தியானபுரம் – விளமல், 

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004.

அலைபேசி:    9842402010  (G Pay)   9842802010 (Whatsapp)

 மின்னஞ்சல் :       panmai2010@gmail.com

                                 panmai@live.com

  இணையம்:     https://panmai.in  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *