ஓர் இரங்கல் குறிப்பு

ஓர் இரங்கல் குறிப்பு

மு.சிவகுருநாதன்

         நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். செய்தியறிந்தவுடன் நண்பர் தியாகசுந்தரம் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

         மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பேசக்கூடிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

சட்டத்தை மீறி சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிப்பது, அதிகத்திறன் கொண்ட பைக்குகளை வாங்கிக் கொடுப்பது போன்றவற்றை பணம்-பணத்திமிர் மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

           பலரும் விதிகளைப் பின்பற்றாத நிலையில் அரசும் உரிய சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி.

சில தினங்களுக்கு முன்பு பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஒரு பெண் மீது மோதி அவர் இறந்த செய்தி வந்தது.

         இவை வெறும் விபத்துகள் அல்ல; படுகொலைகள். எனவே அதற்குரிய வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.

          ரேஷன் பொருள்கள், மதுவகைகள் கொண்டு செல்லும்போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலம் விடப்படுகிறது. அதைபோல பைக் ரேஸ், சிறுவர் ஓட்டும் வாகனங்களை உடன் பறிமுதல் செய்து ஏலம் விடவேண்டும். உரியவர்களிடம் வண்டியை ஒப்படைக்கக்கூடாது.

         வெறும் வழக்குப் பதிவு செய்வது மட்டும் போதாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்கலாம். பணத்திமிருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *