தன்வியின் பிறந்த நாள்

தன்வியின் பிறந்த நாள்

மு.சிவகுருநாதன்

நண்பர் யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியப் படைப்பாளி என பலதரப்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.

‘ரத்த உறவு’ என்ற சிறப்பான நாவலைத் தந்தவர். ‘மஞ்சள் வெயில்’ இவரது மற்றொரு நாவல். உயிர்த்திருத்தல் என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். ‘மாத்தன் மண்புழு வழக்கு’ என இவரது மொழியாக்கப் பட்டியல

நீண்டது.

அண்மையில் சென்னையில் சந்தித்தபோது தனது நூல் ஒன்றை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்த நாள்’ என்ற 10 சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பே இது.

நாவல், சிறுகதை, கவிதை எழுதுவதை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு, சிறார் இலக்கியப் படைப்புகள

மற்றும் அவை சார்ந்த மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு வகையில் தமிழிலக்கிய உலகிற்கு இழப்புதான். இருப்பினும் தமிழில் இன்னும் அதிகம் கவனம பெறாத சிறார் இலக்கிய வகைமையைச் செழுமைப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது.

யூமா வாசுகி போன்ற பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளியால் குழந்தை இலக்கியம் கூடுதல் வளமடையும்.

இந்த நூலை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. பிறகு நூலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நூல் விவரங்கள்:

தன்வியின் பிறந்த நாள்

யூமா வாசுகி

பக்கங்கள்: 119

விலை: ₹120

வெளியீடு:

புக்ஸ் ஃபார் சில்ரன்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *