விழியன் நூல்கள்

விழியன் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 004)

மு.சிவகுருநாதன்

          விழியன் என்கிற உமாநாத் செல்வன் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர். குழந்தை இலக்கியப் படைப்பாளியாக மட்டுமில்லாமல் செயல்பாட்டாளராகவும் வலம் வருபவர். குழந்தைகளுக்கான பல்வேறு வகையான கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவர் நூற்றுக்கணக்கான கதைகளையும் பல்வேறு குழந்தைகளுக்கான சிறிய நூல்களை எழுதியுள்ளார்.

     தனிக் குடும்பச் சூழலில் இன்று குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் இல்லை. எனவே அந்த இடத்தை பெற்றோர்களே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு கதை சொல்ல பெற்றொருக்கு உதவியாக வலைப்பூ (https://vizhiyan.wordpress.com/) மற்றும் பல வாட்ஸ் அப் (Vizhiyan Kids Stories)  குழுக்களில் கதைகளை தொடர்ந்து எழுதியும் பதிவிட்டும் வருகிறார். கணிதவியலில் ஆர்வத்தைத் தூண்டும் பதிவுகளையும் எழுதுகிறார்.

   கல்வி உரிமைகள், குழந்தை உரிமைகள் சார்ந்தும் இயங்கி வருகிறார். புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 ஐ ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க, ஒரு குழுவை ஒருங்கிணைத்தார். கல்விக்கொள்கை சார்ந்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார். 

      ‘The Rise’ அமைப்பினரின் உலகத் தமிழ் விருதுகள் 2019 இல் ‘குழந்தை இலக்கியச் சுடரொளி’ எனும் விருதைப் பெற்றுள்ளார். தமுஎகச, விகடன், கலகம், நியூஸ் 7 யுவரத்னா, சேஷன் சன்மான், சென்னைப் புத்தகக் காட்சி, தேசிய சிறுவர் புத்தக் கண்காட்சி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இவரது குழந்தை இலக்கியப் பணிகளுக்காக உலகத் தமிழ்ச் செம்மொழிப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (Honorary Doctorate) அளித்துச் சிறப்பித்துள்ளது. இவருடைய சிறார் கதைகளுள் ஒன்று (சூரியன் எடுத்த விடுமுறை) இலங்கையில் ஐந்தாம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றது.

       இவரது நூல்களின் பட்டியலைக் காணலாம். பாரதி புத்தகாலயம், வானம், பெரியார் பிஞ்சு பதிப்பகம் போன்றவை இவரது நூல்களை வெளியிட்டுள்ளன. இவை பெரும்பாலும் அச்சில் உள்ளன. அச்சில் இல்லாத நூல்களும் உண்டு.

விழியன் நூல்கள் பட்டியல்:

 1. திரு குரு ஏர்லைன்ஸ்  ₹30
 2. மாகடிகாரம் (தாத்தாக்களின் தாத்தா கடிகாரம்) ₹30
 3. ஒரே ஒரு ஊரிலே… சிறார் நாவல்  ₹40
 4. காலப்பயணம்  ₹50
 5. கடல்ல்ல்ல் (காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்)  ₹50
 6. ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன்  (சிறார் கதைகள்) ₹50
 7. அனிதாவின் கூட்டாஞ்சோறு  ₹90
 8. மியாம் போ – மழலைக்கதைகள் ₹60
 9. ரோபூ – மழலைக்கதைகள்  ₹60
 10. உச்சிமுகர் ₹55
 11. காராபூந்தி  ₹110
 12. மலைப்பூ  ₹95
 13. மன்னர் பராக்  ₹45
 14. சகி வளர்த்த ஓகி   ₹30
 15. ராபுல்லி -1   சிறார் நாவல்    ₹60
 16. பெருங்கனா  ₹80
 17. அன்பிற்கு ஆயிரம் முகங்கள்  சிறார் கதைகள் ₹60
 18. பென்சில்களின் அட்டகாசம் ₹25
 19. Pencil’s Day Out  ₹30
 20. பென்சில்களின் அட்டகாசம் – Pencil’s Day Out  T/M கலரில் பெரிய வடிவில்… ₹150
 21. பென்சில்களின் அட்டகாசம் 2.0   ₹95
 22. பென்சில்களின் அட்டகாசம் ₹25
 23. Pencil’s Day Out  ₹30
 24. வளையல்கள் அடித்த லூட்டி  ₹30
 25. டாலும் ழீயும்  ₹25
 26. தேன் முட்டாயி: சிறார் சிறுகதைகள்  ₹80
 27. குழந்தையை நெருங்குவோம் – கட்டுரைகள் ₹45
 28. குறுங் – குறுங்கட்டுரைகள்  ₹95
 29. கிச்சா பச்சா – காகங்கள் ஏன் கருப்பாச்சு?    ₹40 (வானம் வெளியீடு)
 30. 1650 – முன்ன ஒரு காலத்துல (வானம்)  ₹80
 31.  அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி (வானம்)   ₹50
 32. உங்கா சிங்கா மங்கா (பெரியார் பிஞ்சு பதிப்பகம்)  ₹60
 33. பம்பம்டோலேய் (பெரியார் பிஞ்சு)  ₹80
 34. யட்சியின் குமிழி ஆசை  (பெரியார் பிஞ்சு)  ₹60

வெளியீடு:01

புக்ஸ் ஃபார் சில்ரன்,

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

வெளியீடு:02

வானம்,

M 22, 6 வது அவென்யூ,

ராமாபுரம்,

சென்னை – 600089.

அலைபேசி: 9176549991

மின்னஞ்சல்:  noolvanam@gmail.com

வெளியீடு:03

பெரியார் புக் ஹவுஸ்,

84/1(50), பெரியார் திடல்,

ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி,

சென்னை-600007

பேசி: 8300393816

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

பள்ளிகளுக்கு வெளியே கல்வி

https://musivagurunathan.blogspot.com/2020/05/blog-post_13.html

காக்கைக்கு கருப்பு என்று பெயர்!

https://musivagurunathan.blogspot.com/2020/05/blog-post_18.html

(எழுத்தாள ஆளுமைகள்நூல்களின் பட்டியல்தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *