ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்

(புத்தகத்திருவிழாப் பரிந்துரைகள் – 006)

மு.சிவகுருநாதன்

       சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர்  பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சமூக விஞ்ஞானியாக போற்றப்படுபவர். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.  இவற்றுள் குறுநூல்கள், பதிப்பித்த நூல்களும் அடங்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வாசித்தால் ஆ. சிவசுவை தொடர்ந்து வாசிக்க வேண்டிய உந்துதல் மற்றும் தேவையேற்படலாம்.

      இங்கு வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறாகச் சுருங்கிப் போய்விட்டது. இதனை விரிவாக்க, மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, திரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நாட்டார் வழக்காறுகள் பயன்படுகின்றன. இவையனைத்தையும் வரலாற்றுண்மைகளாகக் கருதும் போக்கு ஒன்றுள்ளது.

       அவ்வாறில்லாமல் ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்றிற்கும் வழக்காற்றிற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தவர். அவர் தமது பல்வேறு நூற்களின் மூலம் வரலாற்றையும் வழக்காறையும் பொருத்திப் பார்த்து  ஆய்வு செய்வதன் வாயிலாக வரலாற்றில் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்.

       “மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” என்று ஆ.சிவசு வெறொரு நூலுக்கான முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அடித்தள மக்கள் வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, டிச. 2011.)

       இனி பட்டியலுக்கு வருவோம். தற்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு வெளியீடுகளாக இவரது நூல்கள் கிடைக்கின்றன.

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள் பட்டியல்:  (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

 1. அடித்தள மக்கள் வரலாறு  ₹250
 2. காலத்தை வென்ற மாவீரர்கள்  ₹325
 3. வ.உ.சி.யின் திரிசூலம்  ₹95
 4. வரலாற்றில் ஒரு வாழ்வு  ₹250
 5. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்  ₹75
 6. காலனியமும் கச்சேரித்தமிழும்  ₹150
 7. புத்தகத்தின் பெருநிலம்  ₹210
 8. கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்  ₹145
 9. தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்  ₹135
 10. தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி  ₹185
 11. வரலாற்றுப் பொருள் முதல்வாதம் – ஓர் அரிச்சுவடி  ₹60
 12. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில்  இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்  ₹145

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.

பேச: 044-26258410, 26251968, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

 இணையம்:  www.ncbhpublisher.in

காலச்சுவடு வெளியிட்ட நூல்களின் பட்டியல்:

 1. ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்  ₹120
 2. ஆகஸ்ட் போராட்டம் – தமிழகத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ₹160
 3. ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்  ₹200
 4. பாளையங்கோட்டை: ஓரு மூதூரின் வரலாறு  (இணையாசிரியர்: ச.நவநீதகிருஷ்ணன்) ₹100
 5. தமிழ்க் கிறித்தவம்  ₹190
 6. பனை மரமே! பனை மரமே! – பனையும் தமிழ்ச் சமூகமும்  ₹590
 7. தமிழகத்தில் அடிமை முறை ₹200
 8. கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்  ₹190
 9. மந்திரமும் சடங்குகளும்  ₹225
 10. கிறித்தவமும் சாதியும்  ₹200
 11. உப்பிட்டவரை… தமிழ்ப் பண்பாட்டில் உப்பு  ₹200
 12. வரலாறும் வழக்காறும்  ₹150

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் – 629001.

தொலைபேசி: 04652 – 278525.

அலைபேசி:  9677778863

மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

இணையதளம்: www.kalachuvadu.com

பரிசல் வெளியீடு:

 1. பஞ்சமனா? பஞ்சயனா? – சமூக வரலாற்றுக் கட்டுரைகள் ₹130

வெளியீடு:

பரிசல் புத்தக நிலையம்,

216 முதல் தளம்,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை – 600005.

பேசி: 9382853646

மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் நூல்கள் – I

https://musivagurunathan.blogspot.com/2018/08/005.html

பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் நூல்கள் – II

https://musivagurunathan.blogspot.com/2018/08/006.html

(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *