ஷோபாசக்தி நூல்கள்

ஷோபாசக்தி நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 012)

மு.சிவகுருநாதன்

       இலங்கை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த ஷோபாசக்தி  புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கிறார். இவரது படைப்புகள் தனித்துவமானவை. இவரது எழுத்துகளின் வாயிலாக ஈழத்தமிழரின் வாழ்வியல் புதிய கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது புதிய நாவல் ‘ஸலாம் அலைக்’ இருமுனைகளிலிருந்து  தொடங்கிச் சொல்லப்படும் கதை வளையமாக உருவாகியுள்ளது.

     தனது நாவல்கள், சிறுகதைகளின் வழி சோதனை முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார். கட்டுரைகளின் வழி தனது கோட்பாடுகளை வலியுறுத்தும் செயல்பாட்டாளராகவும் இருக்கிறார்.

      லீனா மணிமேகலை, ஜெரால்டு உடன் இணைந்து ‘செங்கடல்’ (Dead Sea) என்ற) திரைப்படத்தின் மூலம் தனுஷ்கோடி மீனவர்களின் புறக்கணிக்கப்பட்ட வாழ்வியலையும் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார். இப்படத்தின் தணிக்கையில் பிரச்சினை இருந்தாலும் இந்திய பனோமராவில் தேர்வாகி பல திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது.

      2015 Canne’s திரைப்பட விழாவில் Palme d’or  விருது வென்ற தீபன் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திரம்  ஷோபாசக்தியுடையது. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

     அவரது நூல்கள் அனைத்தையும் ‘கருப்புப் பிரதிகள்’ வெளியிடுகிறது.

 கருப்புப் பிரதிகள் வெளியீடுகள்:

  1. ஸலாம் அலைக்  -நாவல்   ₹450
  2. BOX கதைப் புத்தகம் – நாவல்   ₹290
  3. இச்சா – நாவல்  ₹350
  4. கொரில்லா  – நாவல்   ₹110
  5. ம்  – நாவல் ₹170
  6.  மூமின்  – சிறுகதைகள்    ₹250
  7. தேசத்துரோகி  – சிறுகதைகள்  ₹140
  8. எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு – சிறுகதைகள்  ₹150
  9. கருங்குயில்  – சிறுகதைகள்  ₹200
  10. கண்டி வீரன்  – சிறுகதைகள்  ₹200
  11. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் (தொகுப்பு)  ₹140
  12. தனுஜா: ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் – தனுஜா சிங்கம் (பதிப்பு)  ₹350
  13. வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள்  ₹160
  14. முப்பது நிறச் சொல் – கட்டுரைகள்    ₹270
  15. பஞ்சத்துக்கு புலி – கட்டுரைகள்  ₹150
  16. நான் எப்போது அடிமையாயிருந்தேன்  – கட்டுரைகள்  ₹90
  17. போர் இன்னும் ஓயவில்லை (உரையாடல் தொகுப்பு)  ₹65

பிற வெளியீடு:

  1. கொலை நிலம்  தியாகு – ஷோபா சக்தி முரண் அரசியல் உரையாடல்  ₹80 (வடலி வெளியீடு)

சுகனுடன் இணைந்து தொகுத்தவை:

1. சனதருமபோதினி 2001

2. கறுப்பு  2002

பிற பதிப்புகள்:

 1. குழந்தைப் போராளி

 2. அகாலம் -ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்

3. குவர்னிகா (GUERNICA) – யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர்

அச்சில் இல்லாத குறுநூல்:

  1. இன்றெமக்குத் தேவை சமாதானமே (பேரா. அ.மார்க்ஸோடு இணைந்து…)

வெளியீடு:

கருப்புப்பிரதிகள்,

பி 55 பப்பு மஸ்தான் தர்கா,

லாயிட்ஸ் சாலை,

சென்னை – 600005.

பேச: 9444272500

மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா

https://musivagurunathan.blogspot.com/2011/01/blog-post_23.html

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *