சிவகுமார் முத்தய்யாநூல்கள்

சிவகுமார் முத்தய்யா  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 017)

மு.சிவகுருநாதன்

      தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் எழுத்தாளர். தமது எழுத்துகளில் அடித்தட்டு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து வருகிறார்.

         சிவகுமார் முத்தய்யா காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் தற்போது நாளிதழ் ஒன்றின் செய்தியாளராகப் பணிபுரிகிறார். கதை, கவிதை தவிர அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘ஞாபக குறிப்புகள்’ இவரது கட்டுரைத் தொகுப்பாகும். “காவிரிப் படுகையே எனது கதைக்களம், விவசாயிகள் வேதனையில் வாடும் இன்றைய நிலையில் நான் வேறெதை எழுத முடியும்” என்று சொல்வதன் வழி சிவகுமார் முத்தய்யா சமகால அரசியலை பேசுபொருளாக்குகிறார்.

         இவரது முதல் தொகுப்பான  ‘கிளி வரும் போது…’ ஐ முற்றம் டிசம்பர் 2008 இல் வெளியிட்டுள்ளது. (விற்பனை உரிமை: நிவேதிதா புத்தகப்பூங்கா). ‘செறவிகளின் வருகை’ என்ற இரண்டாவது தொகுப்பை ஜனவரி 2014 இல் சோழன் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விற்பனை உரிமை: தோழமை வெளியீடு).

     இவரது முதல் நாவலான ‘குரவை’ விளிம்புநிலை நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை ஆவணப்படுத்துகிறது.  இந்நூலையும் அவரது சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்புகளையும் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்டுள்ளது.

சிவகுமார் முத்தய்யா  படைப்புகள்:

  1. கிளி வரும்போது – சிறுகதைத் தொகுப்பு  (முற்றம் வெளியீடு)
  2. ஆற்றோர கிராமம் – குறுநாவல்கள் 
  3. செறவிகளின் வருகை – சிறுகதைத் தொகுப்பு  (சோழன் படைப்பகம்)
  4. செங்குருதியில் உறங்கும் இசை – சிறுகதைத் தொகுப்பு (சாந்தி பப்ளிகேஷன்ஸ்)
  5. ஞாபக குறிப்புகள் – கட்டுரைகள்

யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள்:

  1. இளையராஜாவின் காதலிகள் – சிறுகதைத் தொகுப்பு ₹160
  2. தூண்டில் முள் வளைவு – குறுநாவல் தொகுப்பு  ₹290
  3. குரவை – நாவல்  ₹290

வெளியீடு:    

யாவரும் பப்ளிஷர்ஸ், 

24, கடை எண்: B,   S.G.P. காம்ப்ளக்ஸ்,

 தண்டேஸ்வரம் பேருந்து நிறுத்தம்,

பாரதியார் பூங்கா எதிரில்,

வேளச்சேரி முதன்மைச்சாலை,

வேளச்சேரி,  

சென்னை – 610042.

அலைபேசி: 9042461472  / 9841643380

மின்னஞ்சல்:   editor@yaavarum.com   இணையம்:   www.yaavarum.com

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா 

https://musivagurunathan.blogspot.com/2015/06/blog-post_23.html

 இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *