சி.எம்.முத்து  நூல்கள்

சி.எம்.முத்து  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 016)

மு.சிவகுருநாதன்

          தஞ்சாவூர் அருகிலுள்ள இடையிருப்பில்  சந்திரஹாசன் – கமலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த மாரிமுத்து தனது பெயரை சி.எம்.முத்து என சுருக்கி வைத்துக் கொண்டார். வெள்ளாந்தியான இந்த கிராமத்து மனிதர் நாட்டுப்பாடல்களை அழகாகப் பாடக்கூடியவர். 

        மேலதஞ்சைப் பகுதியில் வாழ்வியலை அவர்களது வட்டாரத் தன்மையுடன் படைப்பில் கொண்டு வருபவர். பிற வட்டார வழக்கிற்கு உள்ள ஏற்புடைமை தஞ்சைப் பகுதிக்கு இல்லை. கீழத்தஞ்சையில் சோலை சுந்தரபெருமாளுக்கு நிகழ்ந்ததுதான் மேலத்தஞ்சையில் சி.எம்.முத்துவிற்கு ஏற்பட்டது. இவர்களது எழுத்தில் காணப்படும் இனவரைவியல் தன்மையையும் புறக்கணிக்க இயலாது.

       “ தி.ஜா. தஞ்சை மண் வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்”, என்று 9 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடநூல் இன்றும் சொல்லித் தருகிறது. சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் போன்றோர் எழுத்துகளில் வெளிப்படுவது எந்த மண்ணின் வாசனை என்ற கேள்வி நியாயமானது.

         கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். ஆனால் மைய நீரோட்ட இலக்கிய உலகில் புறக்கணிக்கப்படும் மனிதராக இருக்கிறார். அவருடைய எழுத்திற்கான பெரிய அங்கீகாரம் ஏதுமில்லை. அதைப்பற்றிய கவலையில்லாமல் தமது எழுத்துப்பணியை மேற்கொண்டு வருகிறார்.  இவரது படைப்புகளில் சில கீழே தரப்படுகிறது.

நாவல்கள்:

  1. நெஞ்சின் நடுவே (1982)
  2. கறிச்சோறு  (1989)
  3. அப்பா என்றொரு மனிதர் (2000)
  4. பொறுப்பு  (2001)
  5. வேரடி மண்  (2003)
  6. ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010)
  7. மிராசு (2018)

சிறுகதைகள்:

  1. ஏழுமுனிக்கும் இளைய முனி
  2. மழை
  3. அந்திமம்
  4. இவர்களும் ஜட்கா வண்டியும் (2004)
  5. சி.எம்.முத்து சிறுகதைகள்

         2020 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தராக  கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் இருந்த காலகட்டத்தில் கவிஞர் ரவிசுப்பிரமணியன், எழுத்தாளர்கள் பாமா, சி.எம்.முத்து, கீரனூர் ஜாகீர் ராஜா, ஸ்ரீதர கணேசன் ஆகிய ஐந்து பேரும் வருகை தரு இலக்கிய ஆளுமையாகப் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

         இவரது சில நூல்கள் மட்டுமே தற்போது கிடைக்கின்றன. எஞ்சிய நூல்கள் குறிப்பாக அறிவுப் பதிப்பகம் வெளியீடுகள் அச்சில் இல்லை.  கிடைக்கும் சில நூல்களின் பட்டியல்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:

  1. சி.எம்.முத்துவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ₹565

அனன்யா வெளியீடுகள்:

  1. அப்பா என்றொரு மனிதர்  ₹400
  2. கறிச்சோறு  ₹155
  3. மிராசு  ₹780

அறிவுப் பதிப்பகம் வெளியீடு:

  1. மழை சிறுகதைகள்  ₹50

(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *