சீனிவாச ராமாநுஜம்  நூல்கள்

சீனிவாச ராமாநுஜம்  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 018)

மு.சிவகுருநாதன்

            தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ‘ஆடுகளம்’ நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் போன்ற நாடகங்களை இயக்கி நடித்தவர்.

        காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை ஆகிய நூல்களின் ஆசிரியர். மண்ட்டோ படைப்புகள், அங்கிள் சாமுக்கு (மண்ட்டோ கடிதங்கள்), மௌனவதம் (ஆர்துரோ வான் வாகனோ), தீப்பற்றிய பாதங்கள் (டி.ஆர்.நாகராஜ்), இரண்டு தந்தையர் (சுந்தர் சருக்கையின் மூன்று நாடகங்கள்), விரிசல் கண்ணாடி (கோபால் குரு, சந்தர் சருக்கை ஆகியோரின் 8 கட்டுரைகள்) ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலுக்குப் பிறகு சீனிவாச ராமாநுஜம் என அறியப்படுகிறார்.

       ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலின் விரிவு  ‘Renunciation and Untouchablity: The Notional and the Empirical in the Caste Order’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் (சர்வதேசப் பதிப்பு) வெளியானது. (விலை: ₹10,587, வெளியீடு: Routledge India) தற்போதைய வெளியீடு (March 31, 2021) ₹995க்கு கிடைக்கிறது.

       இவர் அதிகம் எழுதுவதில்லை என்றாலும் மிகுந்த உழைப்பு எடுத்துக்கொண்டு, நுட்பமாகவும் செறிவுடனும் எழுதக்கூடியவர். கடின உழைப்பு, திருத்தம், செம்மையாக்கத்திற்கு பின்னே இவரது படைப்புகள் பொதுவெளிக்கு வருகிறது. தற்போது இவது நூல்கள் சிறப்பாக வகையில் ‘எதிர் வெளியீட்டில்’  கிடைக்கிறது.

எதிர் வெளியீடுகள்:

  1. சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்  ஒரு தோற்றப்பாட்டியல் வாசிப்பு  ₹700
  2. விரிசல் கண்ணாடி   ₹450
  3. இந்து மதம்: ஒரு விசாரணை  ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்   ₹160
  4. மண்ட்டோ படைப்புகள் – (மொ)  (எதிர் வெளியீடு)   ₹900
  5. தீப்பற்றிய பாதங்கள் (முழுமையாகத் திருத்தப்பட்ட பதிப்பு)  தலித் இயக்கம் | பண்பாட்டு நினைவு | அரசியல் வன்முறை   ₹550
  6. சிறுவர்களுக்கான தத்துவம்  – சிந்தித்தல், படித்தல், எழுதுதல் – சுந்தர் சருக்கை (மொ) த. ராஜன், சீனிவாச ராமாநுஜம் ₹300

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: +91 4259 226012

Mobile: 98948 75084 / 99425 11302

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்:  https://ethirveliyeedu.com/

பரிசல் வெளியீடுகள்:

  1. சந்நியாசமும் தீண்டாமையும்  சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்   ₹200
  2. இரண்டு தந்தையர்  நாடகங்கள் சருக்கை (மொ)   ₹200 

வெளியீடு:

பரிசல் புத்தக நிலையம்,

216 முதல் தளம்,  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை – 600005.

தொடர்புக்கு:  9382853646

மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

பாரதி புத்தகாலய  வெளியீடு:

  1. அவமானம்  – மண்ட்டோ படைப்புகளின்  சிறு தொகுப்பு  ₹90

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

பார்ப்பனர்களைப்  பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்

(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *