தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள்

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 024)

மு.சிவகுருநாதன்

         நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள பெரியதும்பூரில் பிறந்த தென்னவன் வெற்றிச்செல்வன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.  

       கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர், பேச்சாளர், குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்குநர், விமர்சகர் என்று தமிழ் இலக்கியப் பரப்பில் செயல்படும் பேராசிரியராக இருக்கிறார். இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். முக்கூடல் என்ற அனைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு மாதந்தோறும் நூல் அறிமுகம், விமர்சனம், குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடல் போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

      பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது சமச்சீர் கல்வி உருவாக்கத்தில் பங்கெடுத்தார். பல்கலைக் கழகப் பாடத்திட்ட குழுக்கள் மற்றும் இதர குழுக்களிலும் செயலாற்றி வருகிறார்.

         இவரது நூல்களைப் பெரிய பதிப்பகங்கள் இதுவரை வெளியிடவில்லை. தாமே நூல்களை வெளியிடுவதாலும் அல்லது சிறிய பதிப்பகங்கள் வழியே செல்வதாலும் இவரது படைப்புகள் பெரியளவில் சென்றடையவில்லையோ என்கிற ஆதங்கம் உள்ளது.

         நூல் வெளியீடு, விநியோகம் உள்ளிட்ட தமிழ்ப் பதிப்புலகச் சிக்கல்கள் அனைத்து படைப்பாளிக்கும் பொதுவானதாக உள்ளது. அமைப்பு, இயக்கம் சார்ந்து செயல்படும் படைப்பாளிக்கு சற்றுக் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

        இனி அவரது நூல்களின் பட்டியல்:        

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள் பட்டியல்:

கவிதைத் தொகுப்புகள்:

1.       மற்றவை நேரில் (கவிதை நூல்) – 1993

2.       புத்தகமல்ல – 1996

3.       மனத்தடி நீர் – 2002

4.       உப்புச் சிற்பங்கள் – 2007

5.       கடல் எரியும் காலம் – 2009

சிறுகதைத் தொகுப்புகள்:

1.       தைரியமாகச் சொல்  (1999)

2.       ஸ்டாபிசாக்ரியா   (2014)

திறனாய்வுகள்:

1.       சொற்களின் ஒளிச்சேர்க்கை (கட்டுரைகள்) – 2006

2.       நகரும் திணைகள் (கட்டுரைகள்) – 2006

3.       திசையெல்லாம் தமிழ்க் கவிதை (திறனாய்வு) – 2006

4.       ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் (திறனாய்வு) -2009

5.       காமம் செப்பாது கண்டது மொழிதல் (கட்டுரைகள்) – 2009

6.       அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) -2011

7.       உலகமயத் தமிழ்  (2014)

8.       நிழல் காண் மண்டிலம்   (2016)

9.       அயல்நாட்டுத் தமிழ் நூலடைவு  (2016)

10.   உண்டு காட்டி  (2016)

11.   அக்கரைப் பதிவுகள் – அக்கறைப் பார்வைகள் (2016)

12.   வெயிலைப் பருகி நதியைக் கொப்பளித்தல்  (2020)

13.   செம்பொருளும் பழிகரப்பும்   (2022)

14.   பன்னாட்டுத் தமிழ்ப் படைப்பாக்கம்  (2022)

15.   பன்னாட்டுத் தமிழ் ஆய்வாக்கம்  (2022)

16.   தமிழ்ச் செவ்வியல்: மீளாய்வும் மேலாய்வும் (2022)   ₹125 (பன்மை வெளியீடு)

வரலாறுகள்:

1.       மெய்யாக வாழ்ந்த கதை (இலக்கிய ஆவணம்) – 2006

2.       சேரன் – காலமும் கருத்தும்   (2016)

குறும்பட இயக்கம்:

1.       தரிசு – குறும்படம்

ஆவணப்பட இயக்கம்:

1.       மறைத்தமிழ் – ஆவணப்படம் (வீரமாமுனிவர், சீகன் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப், இரேனியஸ், அன்ரிக்கு அடிகளார் போன்றோரது தமிழ்ப் பனிகள் குறித்த ஆவணப்படம்)

2.       பெண்ணென்றால் ….(பெண்ணிலைவாதம் குறித்த ஆவணப்படம்)

வெளியீடு:

சோழன் படைப்பகம்,

5D, பொன்னம்பலம் சாலை,

கே.கே.நகர்,

சென்னை -78.

கைபேசி: 9444302967. 

மின்னஞ்சல்: vetripoet@gmail.com

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை

(எழுத்தாள ஆளுமைகள்நூல்களின் பட்டியல்தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *