திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் அம்மையப்பன் ஜெய்லானி பீவி மஹால் (ஜெயிலானியா மர்கஸ்)

மு.சிவகுருநாதன்

திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற கிராமத்தில் தாயின் நினைவாக ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் உருவாக்கப்பட்டு, திறக்கப்பட்ட செய்தி நேற்று (09/06/2023) காட்சியூடகங்களில் செய்தியாக வெளியானது. இன்றைய (10/06/2023) அச்சு ஊடகங்களில் அச்செய்தி இடம்பெற்றுள்ளது.

இன்று (10/06/2023) மாலை நிலாக்களுடன் அங்கு கிளம்பினோம். அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் இந்த மர்கஸ் அமைந்துள்ளது. மாலை வேளையில் நல்ல கூட்டம். தாஜ்மஹாலை ஒத்த வடிவமைப்பில் அழகான மினார்கள், நீரூற்றுகள், விளக்கொளி என ரம்யமாகவும் மனதுக்கு இதமான இடமாகவும் இந்த ரவ்ழா ஷரிப் திகழ்வதைக் கண்டோம். இரவுநேர விளக்கொளியில் காண்பதற்கு இனிமையாக உள்ளது.

மறைந்த தனது தாயார் செய்யிதத்தினா ஜெயிலானி பீவி அம்மாள் நினைவாக, அவரது புதல்வர் ஜனாப் அமுருதீன் ஷேக் தாவுத் அவர்கள் 06/03/2021 இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 02/06/2023 அன்று இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலானியா மர்கஸ் (ரவ்ழா ஷரிப்) உடன் ஜூம்மா பள்ளிவாசல், ஹிப்சு மதரஸா போன்றவையும் மிக அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் இவ்விடத்தைக் கண்டுகளித்து ஒளிப்படமெடுத்துத் திரும்புகின்றனர். 

இன்றைய மாலைப்பொழுது நிறைவாக கழிந்தது. ஜெயிலானி பீவி அம்மாள் எல்லார் மனங்களிலும் நிறைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *